வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில், நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், 3 பேர் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில், மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நேருக்கு நேர் மோதியதில், விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்களை, அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு, செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் 3 பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது, மெனிக்பாம் படிவம் இரண்டை சேர்ந்த 19 வயதுடைய சு.தனுசன் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (சி)