நாடளாவிய ரீதியில், இன்று உயர் தர மாணவர்களுக்கான பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்திலும் உயர் தர பரீட்சை, அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
அனைத்து பரீட்சை நிலையங்களிலும், இரணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் மன நிலையை குழப்பாத வகையில், உரிய பரிசோதனைகளின் பின்னரே பரீட்சை நிலையங்களுக்கு செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தனியார் பரீட்சார்த்திகள், பாடசாலை பரீட்சார்த்திகள் என அனைவரும் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரங்கள், அனுமதி அட்டை என அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின்னர், பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதுடன், பரீட்சை எழுதுவதற்காகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்சியான பாதுகாப்பு கடமைகளில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் தொடர்பாகவோ பாதுகாப்பு தொடர்பாகவோ முறைப்பாடுகள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக, அவசர தொலைபேசி இலக்கங்களும் பரீட்சை நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (சி)