வவுனியாவில், அமைதியான முறையில் க.பொ.த உயர்தர பரீட்சை!

நாடாளவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள உயர் தரப் பரீட்சைக்கு, வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 512 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக, 33 பரீட்சை நிலையங்களும் 9 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களுக்கு, இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் அடையாள அட்டையை பார்வையிட்ட பின்னர், பரீட்சை மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், பரீட்சை அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!