கேகாலை மாவனெல்ல பகுதியிலிருந்து, நுவரெலியா அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 தொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று அக்கரகந்தை பகுதியில் அமைந்துள்ள நீர் மின் உற்பத்தி நிலைய கட்டிடத்திற்கு அண்மையில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றிற்கு இடமளிக்கும்போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் மோட்டர் சைக்கிளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அதன் சாரதி சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.
எனினும் பலத்த காயங்களுக்குள்ளான பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (சி)