முல்லைத்தீவு பொன்னகர் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில், போரின்போது ஒருகாலினை இழந்த முன்னாள் போராளி ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது.
வீட்டுக்கு அருகில் குப்பைகளை எரிப்பதற்காக தீ மூட்டியவேளை, தீப் பரவல் ஏற்படதாலேயே குறித்த வீடு தீக்கிரையாகியுள்ளது.
தீ விபத்தின் காரணமாக, முக்கிய ஆவணங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
அத்தோடு முன்னாள் போராளியின் வாழ்வாதரத்திற்காக வழங்கப்பட்ட கதிரை மற்றும் மேசைகளும்
தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (சி)