நல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாட்களாக சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்டுள்ளன.
சுகாதார ஊழியர்களினால் பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்றப்பட்டு, இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்தில் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நன்மை கருதியே யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் செயற்பாடு கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)