வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று ஆலய சூழலில், பொலிஸாரால் சாதாரண தேடுதல் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, ஆலய சூழலில் உள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சாதாரண தேடுதல் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூரில் பெருமளவு பொலிஸார் இன்று கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், சிவில் உடை தரித்த பொலிஸாரும் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட்ட அனைத்துப் பொலிஸ் நிலையங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பொலிஸார் இவ்வாறு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஆலய சூழலில் வசிப்பவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் வருகை தருவோர் தொடர்பில் உறுதிப்படுத்தும் வகையில் இன்று சாதாரண தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவிலும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(மு)