ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

அல்குர்ரானை அவமதித்தமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஹத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

தேசிய பல சேனா அமைப்பின் பொது செயலாளர் வடரேக விஜித்த தேரர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி பிரவேசித்து அல்குர்ரானை அவமதித்தமை ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, கலஹெட்டியேன பகுதியில் சிற்றூர்ந்து ஒன்றுக்கு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணித ஆசிரியர் உள்ளிட்ட 8 பேரை இன்று அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!