சஜித்திற்கு ஆதரவாக தென்னிலங்கையில் சுவரொட்டிகள்.

‘2020இல் எமது ஜனாதிபதி சஜித்” எனக் குறிப்பிடப்பட்டு, தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஜக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணி அமைக்கும் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக தென்னிலங்கையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தென்னிலங்கையின் பல பகுதிகளில், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஜக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலினை எதிர்கொள்ளும் நோக்கில் புதிய கூட்டணி ஒன்றிணை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
ஜக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி அமைக்கும் யோசனை அண்மையில் அக்கட்சியின் செயற்குழுவினால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது தொடர்பிலும் அக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்பதில் அக்கட்சிக்குள் ஒருமித்த கருத்துள்ளபோதிலும் வேட்பாளராக களமிறக்கப்படப்போகும் நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை இழுபறி நிலை நீடிக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள ஒருதரப்பு சபாநாயகர் கருஜெயசூரிய வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், மற்றுமொரு தரப்பினர் அமைச்சர் சஜித் பிரேதாஸ வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக தென்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளில் ‘2020இல் எமது ஜனாதிபதி சஜித்” எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அச்சுவெராட்டிகளை வெளியிட்டவர்களின் தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!