ஜனாதிபதி வேட்பாளராக தற்போது களம் இறங்கமாட்டார்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போது களம் இறங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எந்த தேவையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு கட்சியின் தலைமைத்துவம் இல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை பாதாளத்தில் தள்ளிய ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் இல்லாத சந்தர்ப்பத்திலேயே, சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!