நுவரெலியா லிந்துலையில் விபத்து : ஐவர் காயம்

நுவரெலியா லிந்துலையில், மாவு ஏற்றிச்சென்ற கன்டர் ரக வாகனமொன்று 50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம பிரதான வீதியின் மெலகுசேன பகுதியில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோதுமை மா ஏற்றிச்சென்ற கன்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேர் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக சுமை காரணமாகவே விபத்திற்குள்ளான வாகனம் பள்ளத்தில் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!