நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கொடிச்சீலை கையளிப்பு.

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று சம்பிரதாய மரபுகளைக் கடைப்பிடித்து செங்குந்தர் மரபினரிடமிருந்து கொடிச்சீலை,நல்லூர் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

நல்லூரிலுள்ள செங்குந்தா மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றனர்.

இதன்படி யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாளை காலை பத்து மணிக்கு கொளடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள டான் தொலைக்காட்சியின் சிறப்புக் கலையகத்தின் ‘சைவம் தழைத்தோங்குக எனும் சிறப்பு அரங்கத்தில், சமயசார் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

அத்தோடு, எமது ஓம் தொலைக்காட்சியின் ஊடாக நல்லூர் ஆலயத்தின் மஹோற்சவம் தினந்தோறும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!