இரணைமடுப்பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி கனகாம்பிகைக்குளத்தை சேர்ந்த 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.