புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று (05) காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதனடிப்படையில் அனோமா கமகே பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், லகீ ஜயவர்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.(சே)