முல்லைத்தீவு துர்க்கை அம்மன் ஆலயத்தில் 8 இலட்சம் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அன்னதான மண்டபத்திற்கான நிதியானது, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் கிராமிய அபிவிருத்தி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்னதான மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கலந்து கொண்டதுடன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைரசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச பை உறுப்பினர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமைமகள் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது (மு)