பாகிஸ்தான் செல்கின்றது இலங்கை கிரிக்கெட் பாதுகாப்பு குழு

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானதா என்பதை ஆய்வுசெய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இருவர் அடங்கிய பாதுகாப்பு குழுவொன்று எதிர்வரும் புதன்கிழமை பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், பாகிஸ்தான் வரும் இலங்கை கிரிக்கெட் குழுவானது கராச்சி, இஸ்லாமபாத் மற்றும் லகூர் பகுதியில் இலங்கை அணியினரை தங்க வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள், போட்டி நடைபெறும் மைதானங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கண்காணிக்கவுள்ளது.

அத்துடன் போட்டிக்கான மைதானங்களின் பாதுகாப்பு மற்றும் இலங்கை அணியினரின் பாதுகாப்பு தொடர்பிலும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கூறியுள்ளார்.

தனது பாதுகாப்பு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பாகிஸ்தானுக்கு இலங்கை அணியை அனுப்புவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இலங்கை அணியினர் பயணித்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை ஏனைய நாடுகள் தவிர்த்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!