யாழ். மருதங்கேணி மாமுனையில் பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம் மருதங்கேணி மாமுனைப் பகுதியில், கடற்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 10 கிலோக் கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

அத்துடன், கஞ்சா போதைப் பொருளினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், மாமுனைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்கள் என இனங்கானப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!