திங்கட்கிழமை அதிகாலை இரு முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லாவும் மெஹ்பூபா முக்தியும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது கல்விநிலையங்கள் மூடப்பட்டுள்ளன என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஸ்ரீநகரிலேயே இந்த தடைகள் நடைமுறையிலிருக்கும் என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து காஸ்மீரில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.

அடுத்த என்ன நடக்கும் என்பது தெரியாது யுத்தம் இடம்பெறலாம் என்பது போன்ற சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது என காஸ்மீர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

காஸ்மீரிற்கு வழங்கப்பட்ட விசேட அந்தஸ்த்தை விலக்கிக்கொள்வதற்கு மத்திய அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றுத  என அச்சம் வெளியிடப்பட்டு வரும்நிலையிலேயே அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (சே)