ஜனாதிபதியாகும் தகுதி சஜித்திற்கு உண்டு – கிரியெல்ல

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச கடந்த 20 வருடங்களாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதானது அவர் ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதியாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொள்ளும் பட்டத்தை விடவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அடைந்து கொள்ளும் அனுபவம் பெறுமதி மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றைப் பெற்றுள்ளார். நாம் பாராளுமன்றத்தில் பெற்றுக் கொள்ளும் அறிவை பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் இன்று ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!