சகரானுக்கு நெருக்கமான ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவர் பயங்கரவாதி சஹரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்றவரென பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த அமைப்பு தொடர்பாக ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரசாரம் செய்த மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

முகமது நவ்ஷாத் மற்றும் முகமது இஸ்மாயில் என்ற 25 வயதுடைய இருவரும் அனுராதபுரம் மற்றும் வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் 21இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் தடைசெய்யப்பட்டன.

இந்நிலையில், குறித்த அமைப்புக்கள் தொடர்பாக பல்வேறுகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், பயங்கரவாதி சஹரானுடன் தொடர்புடையதாக குறித்த அமைப்புக்கள் சார்ந்தோர் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!