தமிழரசு கட்சியினர், சமகால அரசியல் நிலைமை மற்றும் அரசியல் செய்நெறி தொடர்பான கலந்துரையாடலொன்றை இன்று திருகோணமலையில் நடாத்தினர்.
திருகோணமலை மாவட்டத்தின் நகர சபை மண்டபத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்; இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜ சிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், துரைரட்ணசிங்கம், யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் உட்பட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது ஓரணியாக தமிழ் மக்கள் இணைந்து ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. (சி)