மட்டக்களப்பில் திறந்த டெனிஸ் சுற்றுப்போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் மற்றும் இலங்கை டெனிஸ் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் திறந்த டெனிஸ் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

 

டெனிஸ் சுற்றுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரசாத் ஒழுங்கமைப்பில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் டெனிஸ் அபிவிருத்தி தலைமை அலுவலகர் பாரதிராஜ் பிள்ளை தலைமையில் இந்த சுற்றுப்போட்டி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர் வரும் 6ஆம் திகதி வரை மட்டக்களப்பில் நடைபெறுகின்ற தேசிய ரீதியான டெனிஸ் சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் விளையாடுகின்ற பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இறுதி போட்டி எதிர் வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!