யாழ் கைதடியில் மூத்தோர் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயத்தில், மூத்தோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.


இன்று பிற்பகல் கைதடி நவபுரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய கழகத் தலைவர் க.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பிரதம விருந்தினராக டான் தொலைக்காட்சி குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன் கலந்து கொண்டார்.

விசேட விருந்தினர்களாக கனடாவிலிருந்து பொ.கந்தசாமி மற்றும் கிருஸ்ணன் நாகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக கைதடி சாந்தி நிலைய அத்தியட்சகர் வை.செல்வம், கிளிநொச்சி மாவட்ட சமூகசேவை அலுவலர் வே.தபேந்திரன், தென்மராட்சி பிரதேச செயலக சமூக சேவை அலுவலர் ப.சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கைதடி மக்கள் நலன் பேணும் நட்புறவுக் கழகம், கைதடி மக்கள் நலன் பேணும் கனடா நட்புறவுக்கழகத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில், மூத்தோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றிருந்தன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!