நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்ட நான்காம் பிரிவு தேயிலை மலையில், முனிசாமி சிலையும், கறுப்புசாமி சிலையும் பிரதிஷ்டடை செய்யும் வைபவமும், புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இன்று நடைபெற்றது.
இதில் கறுப்புசாமி, முனிசாமி ஆகிய சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு, பால்குட பவனி இடம்பெற்றதுடன் பாலாபிசேகம் நீராபிசேகம் ஆகிய இடம்பெற்று விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷா சிவராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி. சக்திவேல், கணபதி கணகராஜ், இ.தொ.கா பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், அக்கரப்பத்தனை, பிரதேச சபை தலைவர் சுப்பிரமணியம் கதிர் செல்வன், நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தை ரவி, நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஜெயராம் வினோஜி உட்பட தோட்டப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
குறித்த ஆலய பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பௌத்த கொடி நாட்டப்பட்டதன் காரணமாக, அப்பகுதியில் அமைதியற்ற
சூழ்நிலை ஏற்பட்டதுடன், அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் அப்பகுதி மக்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)