எமது உரிமைகளை எவரும் பறிக்க முடியாது – மனோ கணேசன்

மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு அதனை தீர்த்து வைப்போமே தவிர, ஓடி ஒழிய மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கண்டி, நாவலப்பிட்டி பகுதியில் கட்சியின் காரியாலயத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

அரசாங்கம் எங்களுடையது என்பதினை யாரும் மறந்து விடக்கூடாது. எம்மோடு நேரடியாக மோத முடியாத சிலர் முகநூல் வாயிலாக பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள்.

கண்டி மாவட்டம் அபிவிருத்தி ரீதியாகவும் வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது. இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மக்கள் எவ்வித வேறுபாடுகளும் இல்லாமல் இன ரீதியாக, மத ரீதியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் தான் சமத்துவம் காணப்படும். சமத்துவம் காணப்பட்டால் தான் நாட்டின் மக்களிடயே ஐக்கியம் காணப்படும். ஐக்கியம், ஜக்கியம் என கூறிகொண்டு அரசாங்கத்தின் காலடியில் நாங்கள் சரணடயவில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும் போய் கெஞ்சும் பழக்கம் ஜனநாயக மக்கள் முண்ணியிடம் ஒருபோதும் கிடையாது.

எமக்கு உரித்தானதை, தேவையானதை கேட்டுதான் பெற்று கொள்கிறோம். அடுத்தவர்களின் உரிமைகளை நாம் என்றும் பறிக்கமாட்டோம்.

எமது உரிமைகளை எவரையும் தட்டிப் பறிக்கவும் விடமாட்டோம். கெட்டவர்களை மன்னிக்கலாம். ஆனால் சொந்த இடத்தில் இருந்து கொண்டு காட்டிகொடுக்கும் துரோகிகளை நாம் ஒரு போதும் மன்னிக்கக்கூடாது.

கண்டி மாவட்டத்தை பொறுத்தவரையில் சிங்கள மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். முஸ்லிம் மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

ஆனால் தமிழ் மக்களுக்கு மாத்திரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட கடந்த காலங்களில் இருக்கவில்லை. ஆகையால் தான் நாங்கள் வேலுகுமாரை நியமித்தோம். கண்டி மாவட்ட மக்களின் கதறல், குமுறல், அழுகை, துன்பம் என்பன நாட்டின் ஜனாதிபதிக்கு தெரியாது. பிரதமருக்கு தெரியாது. சகோதர அமைச்சர்களுக்கு தெரியாது. இவை அனைத்துமே தற்பொழுது வேலுகுமார் எம்.பிக்கு தெரியும் என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!