வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெற்றியடைவேன் : கரு ஜயசூரிய

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி நிறுத்தினால் நிச்சயம் வெற்றியடைவேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்குவார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் குறித்து சில ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவிக்கையில்,

‘ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க நான் தயாராக உள்ளேன். ஆனாலும் நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? இல்லையா? என்பதை கட்சியின் உயர்பீடம்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கினால் நிச்சயம் வெற்றியடைவேன்.

நான் ஒருபோதும் சூழ்ச்சிகளுக்கும், வன்முறைகளுக்கும் துணைபோகவில்லை. கடந்த வருடம் அரங்கேற்றப்பட்ட அரசியல் சதித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் சம்பிரதாயங்களை மதித்து உரிய பதிலடி கொடுத்தேன்.

இந்த நாட்டிலுள்ள மக்களும், சர்வதேச சமூகத்தினரும் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அதை ஒருபோதும் வீணடிக்கமாட்டேன்’ என தெரிவித்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!