அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பாராபட்சமின்றி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்த்தில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறுபட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும், சுலோகங்களையும் ஏந்தியவாறு கோசமிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் உட்பட 14 மாவட்டங்களில் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வெளிவாரியான வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை முதல் மேற்கொண்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் ஏ.எச்.ஜெஸீர் இதன் போது தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!