மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழமகத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவையொட்டி உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம் எனும் தொனிப்பொருளில் இன்று களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இளைஞர் முன்னேற்றக் கழத்தின் தலைவர் கு.சபீந்திரன் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இங்கு மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைகளின் இரத்த வங்கிப்பிரிவின் டாக்டர் மனோ துஷாந்தன் உட்பட வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். (சி)