சாம்பியன் ஆனது, குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி

கல்வி அமைச்சினால், 28ஆவது தடவையாக பாடசாலை மட்டத்தில் நடாத்தப்படும் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் தேசிய விளையாட்டுப் போட்டி குருணாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரனசிங்க கலந்துகொண்டார்.

வலைப்பந்துப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கேற்றன. இறுதிச் சுற்றுப் போட்டியில் எட்டுப் பாடசாலை அணிகள் மோதின.

ஏ.பி என்ற பகுதிகளாக, 13, 15, 17, 19 வயது என்ற அடிப்படையில் இடம்பெற்ற போட்டியில், 13வயது குருணாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

13 வயது ஏ பிரிவில் முதலாவது இடத்தை குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரியும், களுத்துறை திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கண்டி ஹில்வூட் கல்லூரி மூன்றாம் இடத்தையும், குருநாகல் மலிய தேவ பாலிகா கல்லூh நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

 

சிறந்த விளையாட்டு வீரங்கனையாக, குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி மாணவி ஏ.எம்.ஏ.எல்.அபேசிங்க தெரிவு செய்யப்பட்டார்.


15 வயது ஏ பிரிவில் குருணாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி முதலாம் இடத்தையும், கொழும்பு தேவி பாலிகா வித்தியாலம் இரண்டாம் இடத்தையும், களுத்துறை திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி மூன்றாம் இடத்தையும், குருநாகல் மலியதேவ பாலிகா கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரியின் மாணவி ஆர்.எம். சலனி நிஸா சிறந்த விளையாட்டு வீரங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

19 வயது ஏ பிரிவில் களுத்துறை பாலிகா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், குருநாகல் ஹொலி பெமிலிக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கொழும்பு விசாதா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும், கொழும்பு மகளிர் பெண்கள் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

களுத்துறை பாலிகா வித்தியாலயத்தின் மாணவி தெவினா ரன்தெனிய சில்வா சிறந்த விளையாட்டு வீரங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

அதே போன்று அனைத்து பிரிவிலும் பிரிவிலும் பங்கு கொண்ட பாடசாலைகள் பரிசுகளைப் பெற்றுக் கொண்டன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!