ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தோர் எம்முடன் இணையுங்கள் – பசில் ராஜபக்ச

இலங்கை முழுவதும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தங்கள் வீட்டிற்குள் நுளையும் எண்ணத்துடன் எம்மோடு இணையுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற பொதுஜனபெரமுன முன்னணியின் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிடும்போது இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

2018ம் ஆண்டு பெப்ருவரி 10ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சிச்சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டோம். சிறிய கட்சிகள் சில எமக்கு உதவி புரிந்திருந்தது. பிரபல பெரிய கட்சிகள் எம்மோடு இருக்கவில்லை. அதுபோல நாம் புதிய கட்சியினை ஆரம்பித்தால் நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூனினார்கள். நான் அந்த வேளையில் சந்தோசப்பட்டேன். ஏன் எனில் நான் உள்ளே இருந்தேன். அவ்வாறு கட்சி ஒன்றினை ஆரம்பித்தாலாவது வெளியே வந்து நடு ரோட்டில் நிற்கலாம் என்று ஆசைப்பட்டேன். அன்று நாம் கட்சியை ஆரம்பித்தபோது இன்று இங்கே கூடியுள்ளவர்களைப் போன்று எம்மீது நம்பிக்கை வைத்து 50 இலட்சம் மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை வெற்றியடய செய்திருந்தார்கள்;. ஒரு பக்கம் ஜனாதிபதி தலமையிலான கட்சி மறுபுறம் பிரதமர் தலமையிலான அமைச்சர்களை கொண்ட கட்சி இவை இரண்டினையும் அரசியல் வரலாற்றில் பின்னடய செய்து அரசாங்கத்தின் பலம் இல்லாத எமது கட்சியினை வெற்றியடயச் செய்தார்கள். பிரதான இரண்டு கட்சிகளும் அரசியல் வரலாற்றில் குறைந்த வாக்கினை பெற்ற வரலாற்றினை மக்கள் உருவாக்கினார்கள். எனவே அன்றுபோன்று எம்மை மக்கள் எதிர்காலத்திலும் வெறியடயச்செய்வார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது எமது குருவான பண்டாரநாயக்க அவர்கள் உருவாக்கிய கட்சி. நாம் வளர்ந்த கட்சி. மகிந்தராஜபக்ச அரசியல் செய்த கட்சி. அந்த கட்சியின் தற்போதய நிலை கண்டு மிகவும் நாம் மனவேதனை அடைகின்றோம். அதனை விட அந்த கட்சி உறுப்பினர்களை விட டாலி ரோட்டில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தினை விட கடந்த தேர்தலில் அந்த கட்சிக்கு 14 இலட்சம் மக்கள் வாக்களித்திருந்தார்கள். அவர்களை எம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அகில இலங்கை முழுவதும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுகின்றோம். உங்கள் வீட்டிற்குள் நுழைவதுபோன்ற எண்ணத்துடன் வாருங்கள். எந்தவித வேறுபாட்டினையும் காட்டாது மகிந்தராஜபக்ச உங்களை இணைத்துக் கொள்வார். அதிக விரும்பம் கொண்ட தலைவர் யார் என்று அவர்களை கேட்டால் மகிந்ததராஜபக்ச என்று சொல்லுவார்கள். எனவே அவர்களை இணைந்து கொள்ளுமாறு கேட்கின்றோம். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!