உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் 2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

நாளையதினம் ஆரம்பமாகும் பரீட்சைகள் இம்மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இவர்களில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 475 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 678 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!