அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்கு – காணாமல் போனவர் சங்கம்

காணாமல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதால் தாய், மனைவிமாருக்கு எந்த நன்மையுமில்லை அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்கு என அம்பாறை மாவட்ட அனைத்தின காணாமல் போனவர்களின் குடும்ப ஒன்றுமை சங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் தாய், தந்தை மற்றும் மனைவிமார்களுக்கு அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொடுத்து உயிரோடு இருக்கும் உறவுகளுக்கு வாழ்வளிப்பதே எமது அமைப்பின் நோக்கம் என அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்பஒன்றுமைச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் விரையில் அரசாங்கத்தினால் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்று திறக்கப்படவுள்ளது, அங்கு உண்மையாக காணாமல் போனவர்கள் வந்து தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒன்றுமைச் சங்கத்தில் தற்போது அறுபது பேர் பதிவுகளை செய்துள்ளதுடன் எமது அமைப்பில் பதிவுகளை செய்யாதவர்கள் வந்து பதிவுகளை செய்யுமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தம்பிராசா செல்வராணியின் தலைமையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் சுமார் 1700 பேரின் பதிவுகளுடன் கடந்த பதினொரு வருடங்களாக இயங்கி வரும் நிலையில். நிமல்ரங்க திஸங்காமியின் தலையில் சுமார் அறுபது பேருடன் புதிதாக அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒன்றுமைச் சங்கம் எனும் பெயருடன் ஒருவருட காலமாக புதிய சங்கம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.(சி)

 

 

 

 

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!