ராஜபக்ஸ குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக பாராளுமன்ற முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அதிகாரத்தில் ராஜபக்ஸ ஒருவரே அமரவேண்டும் என்பதே, ராஜபக்ஸ குடும்பத்தினரின் நோக்கமாக உள்ளதென பாராளுமன்ற முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிலைப்படுத்தி அதனை இலக்காகக் கொண்டு பிரதான கட்சிகள் அனைத்தும் செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஐக்கிய தேசிய முன்னணி பலமான அணியாக உருவாகுவதற்கான பேச்சுக்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
அந்தந்த கட்சிகளின் எதிர்பார்ப்புக்கள் நோக்கங்கள் விருப்பங்கள் தொடர்பில் ஜனநாயக ரீதியிலான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
கடந்த காலத்தில் செயற்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி மேலும் பல கட்சிகளை அதில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பலத்துடன் அதன் தலைமைத்துவத்துடன் ஏனையவர்களை இணைத்துக் கொண்டு செல்வதற்கான பணிகளே நடைபெறுகின்றன.
இந்த நாட்டில் மீண்டும் ஆட்சியை அதிகாரத்தினை கைப்பற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்ற ராஜபக்ஸ குழுவினருக்கு இவ்வாறான சிந்தனை ஒன்று இல்லை.
இவ்வாறு அவர்கள் பேச்சுக்களில் இடுபடப்போவதும் கிடையாது.
பொதுஜன பெரமுன கட்சியாக இருக்கின்றபோதும் அது ராஜபக்சஸ குடும்பத்தின் விருப்பங்களை நோக்கமாக கொண்ட நிறுவனமாகவே இருக்கின்றது.
இன்று கோட்டபாயராஜபக்ஸவின் பெயரை கூறுகின்றார்கள் மேலும் ஒரு ராஜபக்ஸவின் பெயரை சொல்கின்றார்கள்.
சுற்றிச்சுற்றி போய் மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தின் ஒருவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
அதற்கு அப்பால் சிந்திப்பதற்கு கூட யாரும் அங்கு இல்லை.
குறைந்தது தலைவர் ஆவதற்கு ஆசையுள்ள ஒருவர் கூட முன்னுக்கு வரமுடியாது.
உங்களுக்கு பார்த்தால் தெரியும் குமார் வெல்லகம தலைமைத்துவம் வழங்க முற்பட்டார் அவரை பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து அடித்து விரட்டி விட்டார்கள்.
தொகுதிப் பக்கமே வரக்கூடாது என்று துரத்திவிட்டார்கள்.
இதுதான் ராஜபக்ஸ குழுவின் கலாசாரம்.
ராஜபக்ஸவிற்கு விரோதமாக யாரும் தலைதூக்க முடியாது.
யாருக்கும் எதுவும் செய்ய முடியாது.
ராஜபக்ஸ குழுவினரை சூழ உள்ளவர்களினதும் எதிர்பார்ப்பு எப்படியாவது ராஜபக்ஸ ஒருவரை அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே.
அதேபோன்று ராஜபக்ஸ குடும்பத்தினரது நோக்கம் ராஜபக்ச தவிர வேறு யாரும் இந்த நாட்டில் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதுதான். (நி)