தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.
தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவுடன் மாகாண சபை கலைக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து மாகாண சபையின் அதிகாரமும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனின் வசமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(நி)