விளையாட்டு விபரீதமானதால் சிறுவன் உயிரிழப்பு!

விளையாட்டு விபரீதமானதால், யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 11 வயதுடைய சிவபாலன் அக்சயன் என்ற சிறுவன், கடந்த 24ஆம் திகதி வீட்டின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த நைலோன் கயிற்றில் தொங்கி விளையாடியுள்ளார்.

இந்தநிலையில் சிறுவனை நீண்ட நேரமாகியும் காணத நிலையில், தாயார் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது, சிறுவன் கயிறு கழுத்தில் இறுகிய நிலையில் காணப்பட்டுள்ளான்.

உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!