புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு முன்பாக பரீட்சையில் தோற்றுவதற்காக இன்று காலை ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் மாணவர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.

இறைவழிபாட்டில் ஈடுபட்ட அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலய மாணவர்கள் ஆலய குருமாரின் ஆசியை பெற்றுக் கொண்டதுடன் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வணங்கி பரீட்சை நிலையத்தினுள் நுழைந்ததையும் இங்கு அவதானிக்க முடிந்தது.

இதேவேளை பரீட்சை நிலையங்களுக்கு இலங்கை இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!