அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர்.
அமெரிக்காவில் ஆயுததாரி ஒருவர் நேற்றைய தினம் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வால்மாட் கட்டடத்தில் உள்ள உணவகத்தினுள் நுழைந்த ஆயுததாரி ஒருவர் திடீரென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
இதேவேளை தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இளைஞரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
ஆயுததாரி தாக்குதலுக்கு முன்னர், நான்கு பக்க அறிக்கை ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கையில் ஸ்பானிய மொழி பேசும் லத்தீன் அமெரிக்க மக்கள் டெக்சாசில் அதிகளவில் குடியேறியுள்ளதற்கு விமர்சனம் தெரிவித்துள்ளார்.(நி)