ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணி முதல் 12.00 வரை நடைபெறவுள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 529 மாணவர்களும், தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றுகின்றனர்.
இதற்காக 2 ஆயிரத்து 995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை மத்திய நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலை வளாகங்களுக்குள் எவரும் அனுமதியின்றி பிரவேசிக்கமுடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புலமைப் பரிசில் பரீட்சைக்காக விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. (நி)