களுத்துறையில் கோர விபத்து:6 பேர் உயிரிழப்பு!

காலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் மற்றும் அரச பேருந்துகள் இன்று அதிகாலை நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!