ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பங்காளிக் கட்சிகளை உள்ளடக்கி, அரசியல் முன்னணி ஒன்றை எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கவிருந்தது.
இந்நிலையில், குறித்த நிகழ்வை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிற்போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம், அரசின் பங்காளிக் கட்சிகள் முழுமையாக இணக்கப்பாட்டுக்கு வராமை போன்ற பல காரணங்களால், இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
வேறொரு திகதியில் இந்த மாநாடு நடைபெறும் எனவும், அதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரின் விபரம் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் பெயரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மேற்கோள்காட்டி ஊடகங்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(மு)