தம்பிலுவில் முனையூர் பத்திரகாளியம்மன் ஆலய ஆடிப்பூர பாற்குட பவனி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆடிப்பூரப் பெருவிழாவில் அடியார்கள் கஞ்சிக்கலயம் ஏந்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைவழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக கஞ்சிக்கலயம் ஏந்திய பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தை சென்றடைந்தனர்.

ஆடி மாதத்தில் வருகின்ற ஆடிபூரம் நட்சத்திர தினம் அம்பாளுக்குரிய சிறப்பு தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நன்னாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவார்கள் என ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர்.


இதில் ஆயிரக்கணக்கான சக்தி பக்தர்கள் கலந்துகொண்டு ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளிலும் சமூக நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். (சி)

 

 

 

 

 

 

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!