ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பித்து வைப்பு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகளின் தேர்தல் பிரச்சார பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வால் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர்களின் தேர்தல் பிரச்சார பணிகள் இன்று நாடுமுழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை தேர்தல் வரலாற்றில் புதிய யுக்தி ஒன்றை கையாண்டு முதலமறையாக இணையவழி பிரச்சாரம் மூலமாக தொலைபேசி செயலி ஒன்றை உருவாக்கி, அதனை மக்களுக்கு தெளிவு படுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு, இன்று அதிகாலை நீர்கொழும்பில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சவால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர முதல்வர் டயான் லான்ச உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நாற்பதாயிரம் உறுப்பினர்களை கொண்ட பொதுஜன பெரமுன பிரச்சாரகுழுக்கள், நீர்கொழும்பு முழுவதும் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்வதற்கு தயாராக உள்ளதாக நீர்கொழும்பு நகர முதல்வர் தயான் லான்ச தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!