கண்டி அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு.

கண்டி அக்குறணை சியா மாவட்ட வைத்தியசாலையில், 43 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிகிச்சை சேவைக் கட்டடம், மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா வைபவம் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி மரீனா தஹா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கலந்துகொண்டார்.

அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன், மத்திய மாகாண சுகாதாhரப் பணிமனையின் பணிப்பாளர் ருக்மன் அர்ஜுன, மாவட்ட சுகாதார சேவை அதிகாரி நிதர்ஷனி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!