காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் நல்லூர் ஆலயம் முன் போராட்டம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை, தமிழ்க்கட்சிகள் கைவிட்டுள்ள நிலையில், ஆண்டவனால்தானும் அவர்களுக்கு தீர்வுகிடைக்கட்டும் என தெரிவித்து, இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக, வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் இந்து சமய அவமதிப்புக்கள் மற்றும் அபகரிப்புக்களை எதிர்க்கும் வகையில் சைவ அமைப்புக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில், வவுனியா மாவட்டத்தில் சுழற்சி முறையில் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு எதிராகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!