2019ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா திருகோணமலையில் இடம்பெற்று வரும் நிலையில், உடற்கட்டழகர் தேர்வு போட்டி நேற்று நடாத்தப்பட்டுள்ளது.
மாகாண மட்ட உடற்கட்டழகர் தேர்வு போட்டி, திருகோணமலை மக்கேசியர் உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்தும் சுமார் 45ற்கும் அதிகமான போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
55 கிலோ கிராம், 60 கிலோ கிராம், 65 கிலோ கிராம், 70 கிலோ கிராம், 75 கிலோ கிராம், 80 கிலோ கிராம், 85 கிலோ கிராம் ஆகிய நிறைகளின்கீழ் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, போட்டி இடம்பெற்றது.
நடுவர்களால் ஒவ்வொரு நிறை பிரிவில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கிடையே, இறுதிப் போட்டி நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கிழக்கு மாகாண சிறந்த உடற்கட்டழகராக திருகோணமலையை சேர்ந்த எஸ்.நிமால் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். (மு)