இந்திய -மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 20-20 போட்டி இன்று

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20போட்டி இன்று அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் மோதவுள்ள நிலையில், முதல் இரு போட்டிகளும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது.

இதனடிப்டையில், முதலாவது இருபதுக்கு-20போட்டி, இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணியும் மேற்கிந்திய தீவுகளும் இன்றைய போட்டி இடம்பெறவுள்ள லாடெர்ஹில் மைதானத்தில் இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு மோதிய நிலையில், அதில் இந்திய அணி 1 ஓட்டத்தினால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!