கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 11 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் செயற்திட்டங்களின் கீழ் இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கற்றல் நடவடிக்கைகளுக்காக அதிக தூரம் பிரயாணம் செய்யும் மாணவர்கள் இனங்காணப்பட்டு, அந்த மாணவர்களுக்கு 1 இலட்சத்து 85ஆயிரம் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. (மு)