புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் அ.த.க பாடசாலையின் விளையாட்டு மைதானம் திறப்பு.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில், அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு, விளையாட்டு மைதானத்திற்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் இடம்பெற்றதனை தொடர்ந்து, விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி, பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மூன்று மாணவர்களுடைய கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.


மிகவும் பின்தங்கிய இடமாகக் காணப்படுகின்ற குறித்த பாடசாலையில், வளங்கள் பற்றாக்குறைகள் இருக்கின்றபோதும, பாடசாலையில் சிறந்த முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மூன்று மாணவிகள், பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் விருந்தினர்களால் நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முப்புர வட்டார உறுப்பினர் எஸ்.குகனேசன், சுதந்திரபுரம் கிராம அலுவலர் மு.வருண்ஜீவ், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!