க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக வித்தியா ஹோம பூஜை

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி விருத்திக்கான விசேட வித்தியா ஹோம பூஜை நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களில் 2019ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட வித்தியா ஹோம பூஜை நிகழ்வு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த விசேட வித்தியா ஹோம யாக பூஜையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் கற்றல் விருத்திக்காகவும், கல்வி வளர்ச்சிக்கும், எழுதவிருகின்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் என்ற நோக்காகவும் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வித்தியா ஹோம யாக பூஜை நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள்,பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாக பூஜை நிகழ்வினை தொடர்ந்து பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!