முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோர மீனவர்களின் தொழில்தொடர்பான வசதிவாய்பினை பெருக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஆறு இடங்களில் இறங்கு துறைக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் மீனவர்களின் தொழில் விருத்தியினை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட ஆறு இடங்கிளில் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளன், கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, தீர்த்தக்கரை, சிலாவத்தை, கொக்கிளாய், போன்ற கரையோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான எரிபொருளினை பெற்றுக்கொள்ளல், ஓய்வுமண்டபம், வலை இயந்திரங்கள் திருத்த கட்டம், மலசலகூடம், வாகன நிறுத்தல் இடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுது கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. (மு)